எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.
முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப்
படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த
இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்.
எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறைவேதம் எனக் கொண்டு வந்தாரோ அது அவர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.
எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது தான் கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இது போல் தயாரித்துக் காட்டுங்கள்!" என்று திருக்குர்ஆன் அறைகூவல் விட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34)
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
10:38. "இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று (முஹம்மதே!) கூறுவீராக!
10:39. அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!
11:13. "இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று கூறுவீராக!
11:14. உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கா விட்டால் அல்லாஹ்வின் ஞானத்துடன் இது அருளப்பட்டது என்பதையும், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் கட்டுப்படு கிறீர்களா? (என்று கேட்பீராக!)
17:88. "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே" என்று கூறுவீராக!
17:89. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கியுள்ளோம். மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.
28:49. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர் வழி காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்" என்று கூறுவீராக!
52:33. "இவர் இதனை இட்டுக் கட்டிவிட்டார்" எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
52:34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:35. எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?
தமிழ் குரான் படிக்க www.tamililquran.com

No comments:
Post a Comment