அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Tuesday 30 September 2014

குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை

Tags

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றிப் பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது.


இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும் இன்ன பிற கோள் களாகவும், துணைக்கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின.

பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் இஹய்ஞ் பட்ங்ர்ழ்ஹ்) என இன்றைய அறிவியல் உலகில் கூறப்படும் கோட்பாட்டைத் திருக்குர்ஆன் அன்றே கூறுகின்றது.

இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்து அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது.

அதன் பின்னர் ஏற்பட்ட புகை மண்டலமும் அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் திருக்குர்ஆன் 41:11 வசனத்தில் கூறுகின்றது.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.