அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Wednesday 15 October 2014

திருக்குர்ஆன் வழி கெடுக்காது!


இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்" என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்" என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

[2.26] நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?"

என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் "இதன் மூலம் வழிகெடுப்பான்' என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே "இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "இவ்வுதாரணத்தின் மூலம்' என்று பொருள் கொள்வதே சரியாகும்.

"இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "வேதத்தின் மூலம்' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

மேலும் வழிகாட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழிகெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.



This content was taken from Tamil Quran Android App.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.